சஜித்-அநுர அரசியல் விவாதத்துக்கு நாள் குறித்த தேசிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தங்கள் கட்சித் தலைவர் அநுர குமார பங்கேற்கவுள்ள அரசியல் விவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி நாள் குறித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு தேசிய மக்கள் மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
பிரதான வேட்பாளர்கள்
குறித்த கடிதத்தில் சஜித்-அநுர அரசியல் விவாதம் பிந்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மத்தியில் அது தொடர்பில் தவறான எண்ணக்கரு உருவாக இடமுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்கள் என்ற ரீதியில் சஜித் மற்றும் அநுர ஆகியோருக்கு இடையிலான விவாதம் கூடிய சீக்கிரம் நடைபெற வேண்டும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் 07, 09, 13, 14 ஆகிய நான்கு நாட்களில் ஒரு திகதியில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் நளிந்த ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |