புலனாய்வுத் துறைக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய தேசபந்து தென்னகோன் - செவ்வந்தி
இலங்கையில் மட்டும்தான் குற்றவாளிகளையும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளையும் தேடி அலையும் அவல நிலை காணப்படுகின்றது.
அதாவது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புபட்ட செவ்வந்தியையும் பொலிஸார் தேடும் அதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனையும் குற்றபுலனாய்வு அதிகாரிகள் தேடுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்திருந்தார்.
தேசபந்து தென்னகோனிற்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையுத்தரவு பிறப்பித்திருக்காத சூழ்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இலங்கையில் ஒரு சாதகமான வாய்ப்பு உள்ளது, இவ்வாறு குற்றம் செய்தவர்கள், தேடப்படுபவர்கள், மிக முக்கியமான அந்தஸ்தில் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள்.
செவ்வந்தியை அடையாளம் காட்டுபவர்களுக்கு 1.2 மில்லியன் பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் நிலையயை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பிலும் தேசபந்து தென்னகோன் தேடப்படுகின்றார், என்ற விடயங்களையும் மேலும் விரிவாக அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |