தேசபந்து தென்னக்கோன் விடுமுறையில்! பதிலுக்கு பலிஹக்கார நியமனம்!
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக டி.ஜே.பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் பணிப்பு
முன்னதாக கடந்த மே 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தலையீடுகள் எதுவும் ஏற்படாத வகையில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தின்போது தென்னகோன், வன்முறைகளை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க தவறினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.





டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri
