நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்
பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு..
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அன்றையதினம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் காரை ஓட்டிச் சென்றதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்துள்ளது.
அதற்கமையவே, இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam