கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
இந்தியாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த அவர், தமது பயணப்பையில் பல்வேறு பொதிகளில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து குறித்த போதைப்பொருளை கடத்துவதற்கு முயற்சித்த நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 2 மணி நேரம் முன்
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam