தேசபந்து தென்னகோன் வழக்கு! உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2023்ம் வருடத்தில் மாத்தறை, வெலிகம W15 சுற்றுலா விடுதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கில் இன்றைய தினம் நெவில் சில்வா மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
சரீரப் பிணை
அதனையடுத்து அவரை தலா இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2023்ம் வருடத்தில் மாத்தறை, வெலிகம W15 சுற்றுலா விடுதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, குறித்த வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபராவார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஆட்டத்திற்கு முடிவுக்கட்டிய வொர்ட்டிங்.. இந்த வாரம் பெட்டியை தூக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா? Manithan