தேசபந்துவின் பிணையை ஆட்சேபித்து மேல் நீதிமன்றம் செல்லும் மன்றடியார் நாயகம்
தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கியதை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பாக ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலதிக மன்றடியார் நாயகம் திலீப பீரிஸ் அறிவித்துள்ளார்.
மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதிக்கொண்ட இரண்டு தனிப்பட்ட சரீரப் பிணைகளின் பேரில் தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கியுள்ளார்.
கடுமையான எச்சரிக்கை
சாட்சிகளின் விடயத்தில் சந்தேக நபர் தலையிடக்கூடாது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் பிணையை ரத்து செய்ய வழிவகுக்கும் என்றும் மாத்தறை நீதவான் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
பிணை நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபருக்கு பயணத் தடையை நீதிமன்றம் விதித்ததுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் சந்தேக நபரை பிணையில் அனுமதிப்பதை மேலதிக மன்றாடியார் நாயகம் கடுமையாக எதிர்த்தார், அவர் தொடர்பாக நடந்து வரும் விசாரணைகள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், சந்தேக நபரை விடுவிப்பது விசாரணை செயல்முறைக்கு தடையாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.