உயிர் அச்சத்தில் தேசபந்து தென்னகோன்!
கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பாதுகாப்பு கோரி தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க வெளியிட்ட கருத்துக்களின்படி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதுருகிரிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் அதுருகிரிய பொலிஸ் ஆணையாளரும் தேசபந்து தென்னகோனின் வீட்டிற்குச் சென்று, வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் கஞ்சிபாணி இம்ரான் என்ற பாதாள உலகத் தலைவர் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
தேசபந்து தென்னகோன் தனது சேவைக் காலத்தில், பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பல்வேறு காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை அழிக்க நடவடிக்கை எடுத்ததாலும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை இப்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, தற்போது சிறையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் துறையும் நடவடிக்கை எடுத்து வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
