கைது உத்தரவை தடுக்க கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15வது ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.
பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை
இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வரி விதிப்பு மிரட்டலை அடுத்து... அமெரிக்க-கனடா எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் கைவைக்கும் ட்ரம்ப் News Lankasri

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

இனியா விஷயத்தில் கோபி செய்த செயல், வீட்டைவிட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா... யூடியூப் டிரெண்டிங்கில் பாக்கியலட்சுமி புரொமோ Cineulagam
