வெறிச்சோடிய கொழும்பு வீதிகள்
தனியார் வாகனங்களுக்கு இன்று முதல் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது ன அரசாங்கம் அறிவித்ததை அடுத்து கொழும்பு மற்றும் அதன் புறகர் பகுதிகளில் சன நெரிசல் அதிகமாக காணப்படும் வீதிகள் வெறிச்சோடி போயுள்ளன.
கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்கள்
ஏனைய வேலை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் தெமட்டகொடை மற்றும் நுகேகொடை பிரதேசங்களில் இன்று அதிகாலை வீதிகளின் வாகனங்கள் மிகக் குறைவாக காணப்பட்டதுடன் மக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
அரசாங்கத்தின் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருக்கும் சொற்பளவிலான எரிபொருளை அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் விநியோகிக்கப்பது என அரசாங்கம் தீர்மானித்தது.
இந்த தீர்மானம் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் தனியார் வாகனங்களுக்கு எரிபாருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.
முக்கிய துறைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்
துறைமுகம், சுகாதாரத்துறை, அத்தியவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளுக்கு மாத்திரமே இந்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், நாடு முழுவதும் வீதிகளில் வாகன போக்குவரத்து, மக்களின் நடமாட்டங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை , மட்டக்களப்பு – திருகோணமலை போன்ற வீதிகளும் கடந்த ஓரிரு தினங்களாக வாகன நெரிசலின்றி வெறிச்சோடிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
