பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பரபரப்புத் தகவல்
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள சுமார் 134 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ ஆலோசனை
மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளத் தவறும் நபர்கள் சேவையிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
போதைப பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
