இலங்கைக்கு விமானங்களில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கம்!
இலங்கைக்கு வரும் விமானங்களில் வருகைத் தரக்கூடிய பயணிகள் தொடர்பான கட்டுப்பாட்டை உடன் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் காரணமாக நாட்டுக்கு வருகை தரும் விமானங்களில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், தற்போது குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், விமானங்களில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் ஏனைய பயணிகளுக்கும் இலங்கை வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் இந்தத் தீர்மானம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
