புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களின் பதவிப்பிரமாணங்கள் நாளை மறுதினம் (21) மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் காலை நடைபெறும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர்கள் அன்றைய தினம் பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை
இதற்கிடையில், 21 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று (18) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

இதற்கமைய, சில பெரிய அமைச்சுக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதி அமைச்சர்களை நியமிக்க வேண்டியிருப்பதால் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 21இற்கு சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam