இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாரிய அபிவிருத்தியைக் கண்டுகொண்டிருக்கின்றார்கள் - பிரதி அமைச்சர் தெரிவிப்பு

Sri Lankan Tamils Tamils Ratnapura
By Malaivanjan Oct 02, 2026 11:57 AM GMT
Report

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நாட்டில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் பயன்களைப் பெற்று வருவதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரண்டு வருட கால அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (01.10.2026) இரத்தினபுரி மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், கடந்த காலங்களில் அரசியல் ரீதியான அடிப்படையிலேயே அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், தற்போதைய நிலையில் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவான சிறுதோட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் காணப்படுவதால்இ அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை

நீலகாமம் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அவர்களுக்கு காணிகள் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை சுற்றுலாத்துறையை மேம்படுத்தி அதன் ஊடாக பிரதேச மக்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மலையகப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையால் மக்கள் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இ போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் இணைந்து விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்துஇ மக்களுக்கு சிறந்த வைத்திய சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக 53 வீடுகளுக்கு 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கூரைத் தகடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்இ மற்றுமொரு வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக 10.3 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்து வீடுகளை புனரமைத்து மக்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாரிய அபிவிருத்தியைக் கண்டுகொண்டிருக்கின்றார்கள் - பிரதி அமைச்சர் தெரிவிப்பு | Deputy Minister Sundaralingam Pradeep Statement

மலையகப் பகுதிகளில் நீர்வளம் காணப்பட்ட போதிலும், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் மக்கள் தூய குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், இதனைத் தீர்ப்பதற்காக 61 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள்

இலங்கையிலிருந்து ஆண்டுதோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொள்வதாகவும்இ இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து அதிகளவான பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 50 வருடங்களாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார்.

மேலும்இ கடந்த காலங்களில் தமிழ் பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் மற்றும் வளப்பங்கீட்டில் குறைபாடுகள் காணப்பட்டதாகவும்இ கடந்த இரண்டு வருடங்களில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் பாடசாலைகளுக்காக 2023ஆம் ஆண்டு மாத்திரம் 51 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளைஇ இரத்தினபுரி மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 25 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்இ அவை விரைவில் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 397 அனர்த்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து வீடுகளை பூர்த்தி செய்து மக்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் 2184 வீடுகளைக் கொண்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தில் இரத்தினபுரி மாவட்ட மலையக மக்களுக்காக 413 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்தார்.

ஈரான் தொடர்பில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

ஈரான் தொடர்பில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US