வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலம் பொன்னானது: பதில் பொலிஸ் மா அதிபர் யாழில் தெரிவிப்பு

Sri Lanka Police Jaffna Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka
By Kajinthan Nov 10, 2024 03:36 AM GMT
Report

நான் 9 மாத காலம் வடக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்தேன். அந்த காலத்தை ஒரு பொன்னான காலமாக நான் நினைவில் கொள்கின்றேன்.

அந்த வகையில் எனக்கு கீழ் இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகளை பயன்படுத்தி மிக சிறப்பான சேவையை நான் செய்வேன் என நம்புகின்றேன் என இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை நேற்றைய தினம் திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலேசியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்

மலேசியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்

வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலம் பொன்னானது: பதில் பொலிஸ் மா அதிபர் யாழில் தெரிவிப்பு | Deputy Inspector General Of Police Reported Jaffna

சட்டத்தை சரியாக நடைமுறைபடுத்த வேண்டும்

நாங்கள் தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது சம்பந்தமாகவும், நற்காரியங்கள் செய்தால் அதற்கான பிரதிபலிப்புகள் கிடைப்பது இந்த சமூகத்தில் இருந்தே. இப்போது இருக்கின்ற அரசினால், சட்டத்தை சரியாக நடைமுறைபடுத்த வேண்டும் என எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனக்கு கீழ் இயங்குகின்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நான் அது குறித்து அறிவித்திருக்கின்றேன். அதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அசம்பாவித நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவுமில்லை, அதற்கு எதிராக செயல்பட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டிருக்கவில்லை என்பது நல்ல ஒரு உதாரணமாகும்.

எமது காலப்பகுதியில் மிகவும் சீர்கெட்ட ஒரு தேர்தல் யாழ்ப்பாணம் மாவட்ட பகுதியில் நடந்த வரலாறு இருக்கிறது. எமக்கு தெரியும். அப்படியில்லாமல் இந்த தடவை நடைபெற்ற தேர்தல் மிகவும் சமாதானமாக நடைபெறுவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைத்தோம்.

தேர்தலுக்குப் பின்னர் இடம்பெறும் அசம்பாவிதங்கள் குறித்தான காலப்பகுதியை தேர்தலுக்குப் பின்னரான அசம்பாவித காலப்பகுதி என நாங்கள் குறிப்பிடுவோம்.

வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலம் பொன்னானது: பதில் பொலிஸ் மா அதிபர் யாழில் தெரிவிப்பு | Deputy Inspector General Of Police Reported Jaffna

வேதனைக்குட்பட்ட உத்தியோகத்தர்கள்

வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களை அடித்து துன்புறுத்துவதுக்கு எதிராக செயல்படுவது போன்ற செயற்பாடுகள் கடந்த காலப்பகுதிகளில் நிறைவேறியது.

வடக்கு மாகாணத்தில் கடமை புரிந்த காலம் பொன்னானது: பதில் பொலிஸ் மா அதிபர் யாழில் தெரிவிப்பு | Deputy Inspector General Of Police Reported Jaffna 

அசம்பாவித காலப்பகுதியில் பொலிஸாரை போன்று வேதனைக்குட்பட்ட உத்தியோகத்தர்களை நாங்கள் இனம் காண முடியாது. எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை.புதிய ஒரு கலாசாரம் இலங்கை தேசத்தில் உருவாகியுள்ளது.

சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அது எமது இயலாமை அல்லது தவறு என்று தான் கூறலாம். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்ற திணைக்களத்தில் உள்ளவர்கள் விடுகின்ற பிழைகள் என அவற்றை கூறலாம். எந்த ஒரு எதிர்ப்புகளும் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு சூழல் இப்போது எங்களுக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் காதலியை மிரட்டி கடத்த முயற்சித்த காதலன் கைது

நள்ளிரவில் காதலியை மிரட்டி கடத்த முயற்சித்த காதலன் கைது

 

5000 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

5000 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US