பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்

Trincomalee Sri Lanka Eastern Province
By Kiyas Shafe Jun 03, 2026 09:55 AM GMT
Report

திருகோணமலை, கருமலையூற்றுப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலை பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர நேற்று (02) நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார்.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயேந்திரலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜி. எச். எம். ஹேமந்தகுமார மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! சற்று முன்னர் கோட்டாபயவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை

அடையாளம் காண முடியாத அளவுக்கு

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சின்னமாக விளங்கிய இப்பள்ளிவாசல், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1836 ஆம் ஆண்டு தனித்துவமான இந்திய சிற்பக்கலை நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம் | Deputy Defense Minister Visits Trincomalee

யுத்தம் நிறைவடைந்த பின்னர், 2008 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் 'உயர் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டு முப்படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.

அதன்பின்னர் அங்கு பொதுமக்கள் எவரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி இரவு, அடையாளம் காண முடியாத அளவுக்கு இப்பள்ளிவாசல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரின் பிடியிலிருந்த பள்ளிவாசல் காணிக்குள் நீண்டகாலமாக நுழைய முடியாமல் இருந்த கருமலையூற்றுப் பகுதி மக்கள், நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

மக்களின் தனியார் காணிகளை

இதன்போது, இடித்து நொறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் தமது வரலாற்றுப் பள்ளிவாசலை மீண்டும் நிர்மாணிப்பதற்கும், அங்கு சென்று வழக்கம்போல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கி, அதனைத் தங்களுக்கு மீட்டுத் தருமாறு மக்கள் பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம் | Deputy Defense Minister Visits Trincomalee

இவ்விஜயத்திற்கு முன்னதாக, நேற்று காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண விஜயசேகர, "யுத்த காலத்தில் முப்படையினரால் பயன்படுத்தப்பட்ட மக்களின் தனியார் காணிகளை, இயலுமானவரை மிக விரைவில் உரிய மக்களிடமே மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனினும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்தில்கொண்டு, இது தொடர்பாக பாதுகாப்புச் சபையுடனும், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட இறுதி முடிவுகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்! வெளியான அறிவிப்பு

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US