செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உபதவிசாளர் போர்க்கொடி

Vavuniya Northern Province of Sri Lanka
By Thileepan Nov 06, 2026 12:27 PM GMT
Report

செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர்த்து, அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லத் தவறினால் மேலதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ முறைப்பாடு செய்வதுடன், தேவைப்பட்டால் தனது உபதவிசாளர் பதவியிலிருந்தும் விலகப்போவதாக பிரதேச சபையின் உபதவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா (ஜெகன்) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செட்டிகுளம் பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியுள்ள தேசிய வாசிப்பு மாத நிகழ்வுக்கு வாழ்த்துத் தெரிவித்து, பிரதேச சபை நிர்வாகத்தின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்து கூட்டு முயற்சி

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆரம்பமாகியுள்ள தேசிய வாசிப்பு மாத நிகழ்வு எமது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் வெற்றிகரமாக அமைய எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உபதவிசாளர் போர்க்கொடி | Deputy Chairman Raises The Banner Revolt Against

தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களினால் இந்நிகழ்வில் என்னால் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை.

எமது பிரதேச சபையானது தனி ஒரு கட்சியின் வெற்றியினால் அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டு முயற்சியின் மூலமே தற்போதைய சபையின் பெரும்பான்மையை உருவாக்கினோம்.

உபதவிசாளர் பதவி என்பது சபையின் இரண்டாம் நிலை மக்கள் பிரதிநிதித்துவப் பதவியாகும். எனவே, பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் நிர்வாக முடிவுகளும் தவிசாளருடன் மட்டுமல்லாது, உபதவிசாளராகிய என்னுடனும் கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமித்த கருத்துடனேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, எமது பிரதேசத்தின் பிரதிநிதிகளாகவும் மக்களின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்தும் உழைப்பவர்களாகவும் உள்ள அனைத்து கௌரவ உறுப்பினர்களது உரிமைகளும் கௌரவமும் சபையின் தலைமைத்துவத்தினால் எப்போதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

வெளிப்பார்வைக்கு எமது சபை ஒற்றுமையின் சிகரமாக விளங்கினாலும், உள்ளுக்குள் பல பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.

அவை வெளியாருக்குத் தெரியாத வண்ணம் இதுவரை நாம் பொறுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் சமாளித்து வந்தோம்.

ஆனால், எங்களது இந்த பொறுமையையும் நெகிழ்வுத்தன்மையையும் சாதகமாகப் பயன்படுத்தி, என்னையோ அல்லது ஏனைய கௌரவ உறுப்பினர்களையோ தொடர்ந்தும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

உபதவிசாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு

அனைவரையும் அரவணைத்துச் செல்லாமல் தவிசாளர் ஒரு சிலருடன் மாத்திரம் தனிப்பட்ட முறையில் பயணிப்பதும், எமது வட்டாரப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எமக்குத் தெரிவிக்காமல் மறைப்பதும், உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்களைத் தாமதப்படுத்துவதும் எமது கூட்டு ஆட்சி முறைக்குச் செய்யப்படும் அவமரியாதையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உபதவிசாளர் போர்க்கொடி | Deputy Chairman Raises The Banner Revolt Against

பலமுறை இதனை சகித்துக்கொண்டு சென்றபோதிலும், எமது சுயமரியாதையையும் மக்களின் உரிமைகளையும் அடகு வைத்துவிட்டு எம்மால் மௌனமாக இருக்க முடியாது.

தவிசாளர் தனது தன்னிச்சையான செயற்பாடுகளை உடனடியாக மாற்றிக்கொண்டு, அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படத் தவறினால், எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகக் கடுமையாக இருக்கும்.

இது தொடர்பாக மாகாண உள்ளூராட்சி சபையின் மேலதிகாரிகளுக்கும், துறைசார் அரசியல் தலைமைத்துவங்களுக்கும் எமது உத்தியோகபூர்வ முறைப்பாடுகளைக் கொண்டு செல்வோம்.

தேவைப்பட்டால், மக்கள் நலனுக்காகவும் சுயமரியாதைக்காகவும் இந்த உபதவிசாளர் பதவியிலிருந்து விலகுவதற்கும் நான் தயங்கமாட்டேன் என்பதை மிகவும் கவலையுடனும் உறுதியாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களின் உரிமைகளுக்காக எமது குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி செய்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர்கள்..! சடலங்களுடன் வசித்த மகள்

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர்கள்..! சடலங்களுடன் வசித்த மகள்

15 ரூபாவால் உயர்ந்த எரிபொருள் விலை - இலங்கைக்கு வெரிட்டே ரிசர்ச் விடுத்துள்ள எச்சரிக்கை

15 ரூபாவால் உயர்ந்த எரிபொருள் விலை - இலங்கைக்கு வெரிட்டே ரிசர்ச் விடுத்துள்ள எச்சரிக்கை

நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US