ஹட்டன் - கொழும்பு வீதியின் வட்டவளை பகுதியில் தாழிறக்கம்! சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை பெய்த கடும் மழையினால் வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே குறித்த வீதி பகுதியளவில் தாழிறங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டிருந்த நிலையிலே நேற்று மாலை பெய்த கடும் மழையில் பாரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது குறித்த பகுதி ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறு வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் தாழிறங்கியுள்ள குறித்த வீதிப்பகுதி விரைவில் புனரமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam