அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி! பிரபல பொருளியல் நிபுணரின் தகவல்
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 56.5 வீதம் பெறுமதி இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பொருளியல் நிபுணர் ஸ்டீவன் ஹான்கே இந்த விடயம் பற்றிய தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இதுவரையில் ரூபாவின் பெறுமதி இவ்வாறு பாரியளவில் பெறுமதி இழந்துள்ளது.
உலகில் மிகப் பாரியளவில் நாணய அலகுகள் பெறுமதியிழந்து செல்லும் வரிசையில் இலங்கை 9ம் இடத்தை வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோசமான பெறுமதி இழப்பை பதிவு செய்த நாணய அலகு
டொலருக்கு எதிராக மிக மோசமான பெறுமதி இழப்பினை பதிவு செய்த நாணய அலகாக வெனிசுலாவின் பொலிவார் காணப்படுகின்றது.
ஜனவரி மாதம் முதல் இதுவரையில் பொலிவாரின் பெறுமதி 99 வீதம் பெறுமதியிழந்துள்ளது.
ரூபாவின் பெறுமதி இழப்பிற்கு தீர்வாக இலங்கையில் உடனடியாக நாணய சபையொன்றை நிறுவ வேண்டுமென ஸ்டீவன் ஹான்கே பரிந்துரை செய்துள்ளார்.
In this week's Hanke’s #CurrencyWatchlist, #SriLanka takes the 9th place. Since Jan 2020, the rupee has depreciated against the USD by 56.50%. LKA must mothball its Central Bank and install a #CurrencyBoard. pic.twitter.com/N45S9LyxvB
— Steve Hanke (@steve_hanke) June 28, 2022