விவசாய நடவடிக்கைக்கு தேவையான முதற் கட்ட மானிய உரம் வழங்கி வைப்பு(Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான முதற் கட்ட மானிய உரம் கம நல சேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாய நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு பெரும் போக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்குவதற்குரிய இரசாயன உரம் கமநல சேவை நிலையங்களினுடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இம்முறை விவசாய நடவடிக்கை எழுபது வீதமான இராசயன உரத்தையும் முப்பது வீதமான சேதன உரத்தையும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இந்த வாரம் முதல் சகல கம நல சேவை நிலையங்களிலும் முதற்கட்ட இராசயன உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூன்று கட்டங்களாக உர விநியோகம்
இந்த உர விநியோகம் மூன்று கட்டங்களாக மேற்கெள்ளப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், பூநகரி, இராமநாதபுரம், புளியம்பக்கணை, கண்டாவளை, பரந்தன், மற்றும் பளை ஆகிய கமநல சேவை நிலையங்கள் ஊடாக குறித்த உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







