அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நியூசிலாந்து சிறுவன் - இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல்
அவுஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்தினைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் அந்நாட்டு அரசினால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் அவுஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என நியூசிலாந்து ஊடகமான (Stuff )குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இது குறித்து தகவலறிந்த நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, அதிகாரிகளிடம் இந்நாடு கடத்தல் குறித்த விரிவானத் தகவலைக் கோரியிருப்பதாகக் கூறப்படுகின்றது.
எவ்வாறான சூழ்நிலைகளுக்கிடையில் இந்நாடு கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்பதை பார்க்க வேண்டியுள்ளது எனக் கூறியுள்ள நியூசிலாந்து பிரதமர், அவுஸ்திரேலிய அரசின் நாடு கடத்தல் கொள்கையோடு தான் உடன்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்நாடு கடத்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்த அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “இந்த குப்பைகளை அகற்றுவதன் மூலம் அவுஸ்திரேலியாவை பாதுகாப்பான இடமாக மாற்ற முடியும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய உள்துறையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அத்துறையின் பேச்சாளர், தனிப்பட்ட நபரின் விவகாரம் குறித்து துறை சார்பாக பதிலளிக்க இயலாது எனக் கூறியிருக்கிறார்.
அதே சமயம் 18 வயதுக்குட்பட்ட ஒருவரின் விசா ரத்தினைப் பல்வேறு ஆலோசனைக்கு பிறகே மேற்கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் குற்றம் புரிந்து அதற்காக 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலான காலத்திற்கு சிறைத்தண்டனையை அவுஸ்திரேலியர் அல்லாதவர் ஒருவர் பெற்றிருந்தால் அந்நபர் வயது, எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது கருத்தில் கொள்ளப்படாமல் அவரது விசா ரத்து செய்யப்படும் என உள்துறை பேச்சாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
