மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் மோசடியில் ஈடுபட்ட கும்பல்
நாராஹென்பிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை மிக நுணுக்கமாக எடுத்துச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் நாராஹேன்பிட்ட மற்றும் பொரளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை கவனத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி
பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பி்ட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து வீதி போக்குவரத்து திணைக்களம் வழங்கிய பல்வேறு ஆவணங்கள், சமாதான நீதவான்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ முத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறு தேவைகளுக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகைத்தருவோரிடம், அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக தெரிவித்து இவர்கள் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் இருந்த அடையாளந்தெரியாத நபர்கள் பணம் மற்றும் ஆவணங்களுடன் மாயமாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பணம் மற்றும் ஆவணங்களை இழந்தவர்களில் பெரும்பாலானோர் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 13 மணி நேரம் முன்

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam
