குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு (Photos)
கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் வழமையான சேவையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 5, 6 மற்றும் 9ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள் மற்றும் மே 5ஆம் திகதி சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பபடிவங்களை கையளிக்க வந்து திணைக்களத்தினால் இலக்கம் ஒன்றை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செவ்வாய்க்கிழமை, மே 10 முதல், கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.immigration.gov.lk/ என்னும் வலைத்தளத்தை பார்வையிடுவதன் மூலமோ அல்லது 0707101060 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலமோ திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கான கணினி அமைப்பை சீர் செய்யும் பணியில் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதுடன் கூடிய விரைவில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வருந்துவதுடன், திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் வழங்கும் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
