குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை கோரும் தொல்லியல் திணைக்களம்

Mullaithivu
By Independent Writer Mar 26, 2021 05:23 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932ஆம் ஆண்டு உறுதியின்படி தொல்பொருள் என்ற பெயரிலான வரைபடம் ஒன்றின்படி 78 ஏக்கர் காணி வழிபாட்டிடம் ஒன்றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த இடத்தை மீள அளவீட்டிற்காக அறிவிக்கும்படி பிரதேச செயலாளரிடம் தொல்லியல் திணைக்களம் கேட்டுள்ளது. இதன்படி கொழும்பிலிருந்து வருகை தந்த நில அளவையாளரால் கடந்த வருட இறுதி பகுதியில் இப்பிரதேசம் அளவீடு செய்யப்பட்டு குருந்தாவ விகாரை தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு 78 ஏக்கர் வரைபடத்தில் உள்ளடக்கபட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 18ஆம் திகதி இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து தொல்லியல் ஆய்வு பணிகளை குருந்தூர் மலையில் ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 400 ஏக்கரில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணிமுறிப்பு கிராமத்திற்குரிய தமிழ் மக்களுடையதாகும், மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் தமது காணிகளை சுத்தம் செய்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கோடு தண்ணிமுறிப்பு கிராம மக்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் பௌத்த தேரர்கள் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவசர அவசரமாக இந்த காணிகளை கோரி பிரதேச செயலகத்துக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

இந்த நிலையில் மேலதிகமாக 400 ஏக்கர் காணிகளை கோரியுள்ளமை அந்த பகுதி முழுவதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவி சிங்கள மயப்படுத்த முயற்சிப்பதாக தெரியவருகிறது. இந்த காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு வடமாகாண ஆளுநர் திணைக்களத்திலிருந்தும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிற்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தில், தொல்பொருள் திணைக்களம் 400 ஏக்கர் காணி கோரும் விடயம் ஆராயப்படவுள்ளது. அதன் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

GalleryGallery
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US