தொடரும் பௌத்த சிங்களமயமாக்கல்! உடைத்து எறியப்பட்ட திரிசூலம்(Video)
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பௌத்த சிங்கள மயமாக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழ் பேசுகின்ற மக்கள் இன்று இப்படியாக தமது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(25.04.2023)உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“பல சமய வழிபாட்டு தளங்கள் தாக்கபட்டிருக்கின்றன. வணக்கத்துக்குரிய விக்கிரகங்கள், திரிசூலம் என்பன உடைத்து எறியப்பட்டுள்ளன. நிலங்கள் அபகரிக்கபடுகின்றன.
வெடுக்குநாறி மலை மத சின்னங்கள் அழிப்பு தொடர்பான வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி என்ற வகையில் விடயமொன்றை கூற விரும்புகிறேன்.
தற்போது அங்குள்ள இந்து மத சின்னங்கள் அளிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அங்கு வழிபாடுகளை தடுக்கும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதற்கு எதிராக பல வழக்குகளும் தொடரப்பட்டன. எனினும், அவர்களால் அதனை தடுக்க முடியவில்லை.
தற்போது, ஜீப்களில், கட்டை காற்சட்டை அணிந்துவந்த அடையாளம் தெரியாத மத சின்னங்கள் தாக்கியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.”என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக பார்க்கலாம்,

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
