மாபியா போல் செயற்படும் தொல்லியல் திணைக்களம் - வலி. மேற்கு தவிசாளர் நடனேந்திரன்

Jaffna Mullaitivu Sri Lankan Peoples Sri Lanka Government
By Independent Writer Mar 08, 2023 12:03 PM GMT
Report

கடந்தகாலத்தை எடுத்துப் பார்ப்போமேயானால் தொல்லியல் திணைக்களம், அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு ஒரு மாபியா போல் செயற்பட்டு வருகிறது என நான் எனது அனுபவ ரீதியாக பார்க்கின்றேன் என வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாபியா போல் செயற்படும் தொல்லியல் திணைக்களம் - வலி. மேற்கு தவிசாளர் நடனேந்திரன் | Department Of Archaeology Srilankan Government

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று யாழ். நல்லூர் பிரதேசத்திலே மந்திரிமனை போன்ற பழமை வாய்ந்த இராசதானிகளின் கட்டிடங்கள் திருத்தம் செய்வதற்காக தொல்லியல் திணைக்களம் அதனை பொறுப்பேற்று இப்போது புனரமைப்பு வேலைகளை செய்வதற்காக, உள்ளே யாரும் பார்வையிடவோ அல்லது வேறு விடயங்களுக்கோ உள்ளே வரக்கூடாது என அறிவித்தல் வெளியிட்டுள்ளது. 

மாபியா போல் செயற்படும் தொல்லியல் திணைக்களம் - வலி. மேற்கு தவிசாளர் நடனேந்திரன் | Department Of Archaeology Srilankan Government

தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவில் குருந்தூர் மலையிலே சிவன் ஆலயம் இருக்கின்ற இடங்களை கையகப்படுத்தி, அந்த பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ளாத விடயங்களை திணித்து, சிவன் ஆலயம் இருந்த அடையாளங்களை அழித்து அங்கு ஒரு பௌத்த விகாரை அமைப்பதற்கு நீதிமன்றத்தை நாடியது.

இதன்போது நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி, தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் பௌத்த விகாரையை நிறுவியது.

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் மந்திரி மனை உள்ளூராட்சி மன்றங்களுக்குள் உட்பட்டு யாழ். மாநகர சபையின் கீழ் இருந்த காலகட்டத்தில் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து பார்வையிட்டு அதனை திருத்தம் செய்ய வேண்டும் என கூறினார்கள்.

மந்திரிமனை விடயத்தில் வெளிப்படையாக செயற்பட வேண்டும்

மாபியா போல் செயற்படும் தொல்லியல் திணைக்களம் - வலி. மேற்கு தவிசாளர் நடனேந்திரன் | Department Of Archaeology Srilankan Government

அப்போது அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சில ஆண்டுகளில் ஆனந்தசங்கரி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்ததை கூறமுடியும்.

ஆனால் இதையெல்லாம் விடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ளே இருக்கின்ற இவ்வாறான செயற்பாடுகளை விசேடமாக தொல்லியல் திணைக்களம் செய்து வருகிறது.

இனங்களை அழித்து வரலாற்று பொக்கிஷங்களை அழித்து, வரலாற்று சுவடுகளை அழித்து ஒரு இனத்தை எவ்வளவு கேவலமாக நடாத்த முடியுமோ அவற்றை எல்லாம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதே தொல்லியல் திணைக்களம்.

எனவே தொல்லியல் திணைக்களம் நல்லூர் மந்திரிமனை விடயத்தில் வெளிப்படையாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US