தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்களுக்கான ஆதரவை மறுக்கும் பிரித்தானியக் கிளை
இலங்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற எந்த ஒரு வேட்பாளருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரித்தானியக் கிளை ஆதரவளிக்க மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையின் தலைவர் சொக்கநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
நீண்ட காலமாக ஈழத் தமிழ் மக்களின் நன்மதிப்பையும், பேராதரவையும் பெற்றிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இப்போது அதன் மத்திய குழு உறுப்பினர்களின் குழுவாக செயற்பாடுகளாலும், ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலும் கட்சிக்குள்ளே விரிசல்களை ஏற்படுத்தி உடைவுகளை ஏற்படுத்தியுள்ளமை கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியிலும், ஆதரவாளர்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கட்சிக்குள்ளே எதேச்ச அதிகார செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள் இநிலையில் கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர்.
அத்தோடு பலர் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியுள்ளனர். ஒதுக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி கட்சியின் நீண்ட கால மூத்த உறுப்பினர்கள் பலர் சுயேட்சையாக அல்லது வேறு கட்சிகளிலும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றமை என்பது கட்சிக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றுள்ளது.







துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
