இலங்கையில் டெங்கு வாரம் பிரகடனம்
இலங்கையில் (Sri Lanka) தேசிய டெங்கு (Dengue) தடுப்பு வாரம் மே மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த வாரத்தில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 17 மாவட்டங்களில் உள்ள 71 சுகாதார மருத்துவ பிரிவுகளில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
எதிர்வரும் பருவமழையுடன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சமூக வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை காலத்தில் மாத்திரம் இலங்கையில் 22,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |