நான்கு மாகாணங்களில் அதிகரிக்கும் டெங்கு
இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இவ்வருடத்தில் இதுவரை 39 ஆயிரத்து 698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 16 ஆயிரத்து 766 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது.
19 டெங்கு மரணங்கள்
மேலும், வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4 ஆயிரத்து 792 நோயாளர்களும், மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 91 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 4 ஆயிரத்து 12 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 19 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri