முல்லைத்தீவில் டெங்கு நோய் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக தூய்மையற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் ஆகியோர் இணைந்து குறித்த நடவடிக்கையை, இன்று (03.01.2024) மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்திருப்பதனால், நீர் தேங்கி நுளம்பு குடம்பிகள் பரவக்கூடிய சிறிய பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய நீர் தேங்கி நிற்கக்கூடிய பாெருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடுமையான தண்டனைகள்
இந்த அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில் மீறுபவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த டெங்கு ஒழிப்பு செயற்பாட்டை சுகாதார வைத்திய அதிகாரி, பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவம், பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |