கொழும்பு வாழ் மக்களுக்கு மூன்று மாதங்களில் காத்திருக்கும் ஆபத்து! மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு நோய் உச்ச மட்டத்தை எட்டும் என வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய, இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர் மாதத்திலும், அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் டெங்கு நோய் உச்சக்கட்டத்தை எட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவல் தீவிரம்
தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இருந்தபோதிலும், நகரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான நுளம்புகள் அழிந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 586 டெங்கு நோயாளர்களும், மேலும் நாடு முழுவதும் இதுவரை 49,000 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri