கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84 பேருக்கு டெங்கு
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 23ஆம் திகதி வரை 84 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்துள்ளார்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் வகையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று இடம்பெற்றிருந்தது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலக டெங்கு தடுப்பு உதவியாளர்கள், அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வீடு வீடாக சென்று டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி மாதம் முதாம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை 84 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 நபர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 68 நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன் 221 வீடுகளில் இருந்து டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், 4150 வீடுகளுக்கு புகை விசிரல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்துள்ளார்.





பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam