உயர்தரப் பரீட்சை வளாகங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
உயர்தரப் பரீட்சை நடைபெறும் வளாகங்களைச் சுத்தப்படுத்தும் விசேட
வேலைத்திட்டம் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் மூலம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
டெங்கு ஒழிப்புத் திட்டம்
தற்போது தினசரி டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு மழைப்பொழிவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது.
நுளம்பு வளர்ச்சிக்குச் சாதகமான சூழல் உள்ள அதேவேளை, ஜனவரி 4ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகின்றது.
இதன்படி, தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் அறிவுறுத்தலின்படி, உயர்தரப்
பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் துரிதமாக
இடம்பெற்று டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |