கொழும்பில் வந்திறங்கும் ஆளில்லா விமானம்! வெளியான காரணம்
கொழும்பில் பொது சுகாதார பரிசோதகர்களால் உயரமான கட்டிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் நேற்று (20.05.2023) டிரோன் கமெராக்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய கட்டிடங்களில் நுளம்பு இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீரில் காற்றில் இருந்து ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி BTI துகள்களும் தெளிக்கப்பட்டன.
இந்த வருடத்தில் இதுவரை 35,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள், 7,978 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஆளில்லா விமான தாக்குதல்
கொழும்பு மாவட்டத்தில் 7,411 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 2,121 டெங்கு நோயாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைத் தேடும் பணி மேலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் உள்ள ஒவ்வொரு வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் உரிய ஆளில்லா விமானத்தை நாளாந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |