இலங்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் டெங்கு - உயிரிழப்பு 62 ஆக உயர்வு
நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக அதிகரித்துள்ளது.
மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்
கம்பஹாவில் அதிகளவான நோயாளர்கள்
அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,350 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை கம்பஹா மாவட்டத்தில் இருந்து 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் இருந்து 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,829 ஆக கண்டறியப்பட்டுள்ளது.
தெற்கு மாகாணத்தில் 12,738 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 7,370 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 23 மணி நேரம் முன்
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri