டெங்கு மரணங்கள் 59 ஆக உயர்வு
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்று (24) நிலவரப்படி 59 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,114 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதிகளவான நோயாளர்கள்
நேற்றைய (23) நிலவரப்படி, 57 இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 79,016 ஆக உள்ளது.

இருப்பினும், இன்று இறப்பு விகிதம் 0.07வீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, ஜூன் (21,534) மற்றும் ஜூலை (24,739) மாதங்களில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு
கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,950 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri