டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் திடீர் உயர்வு - பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களை இன்று(11.07.2026) தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 67,174 ஆக உயர்ந்துள்ளது.
ஆயிரத்தைத் தாண்டும் நோயாளிகள்
அத்துடன், ஜூலை மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம்(10) சுமார் 1,110 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் இயக்குநர் டாக்டர் கபில கண்ணங்கரா தெரிவித்துள்ளார்.
பல முக்கிய மருத்துவமனைகளின் கொள்ளளவு அதன் உச்ச வரம்பை எட்டியுள்ளதால், மருத்துவமனைகளில் கடுமையான அழுத்தமும் நெரிசலும் நிலவுவதாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.