246 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி - சற்றுமுன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம்

Bandaranaike International Airport Sri Lankan Peoples Turkey
By Vethu Jul 11, 2026 06:28 AM GMT
Report

புதிய இணைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இந்த விபத்தைச் சந்தித்ததுடன், பறவை மோதியதன் காரணமாகத் தனது பயணத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

246 பயணிகளுடன் தரையிறக்கம்

தரையிறங்குவதற்கு ஏற்ற அளவிற்கு எரிபொருள் இருப்பு குறையும் வரை, அந்த விமானம் நீர்கொழும்பு - காயல் அருகே உள்ள கடல் பகுதியில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் குறைந்த வேகத்தில் பயணித்துள்ளது.

246 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி - சற்றுமுன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம் | Bird Attacked On Sri Lankan Flight

தரையிறங்குவதற்கு ஏற்ற நிலையை அடைந்த பின்னர், அது காலை 10.21 மணிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 246 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்ததாகவும், ஏர்பஸ் A-330 ரக விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் உள்ளிட்ட ஒரு குழுவும் இந்த விமானத்தில் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


விமானம் இன்று காலை 7.07 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல்லுக்கான 6 மணி நேரப் பயணத்திற்காகப் புறப்பட்டுள்ளதுடன், அதுவரை விமானத்தில் 80,000 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.

எரிபொருள் குறையும் வரை பறந்த விமானம்

விமானம் புறப்பட்ட உடனேயே பறவை மோதியது, இதுகுறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தார்.

விமானத்தில் எரிபொருள் இருப்புடன் மீண்டும் தரையிறங்குவது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் சமீபத்திய விதிகளுக்கு எதிரானது.

246 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி - சற்றுமுன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம் | Bird Attacked On Sri Lankan Flight

இதன் விளைவாக, தரையிறங்குவதற்கு ஏற்ற நிலைக்கு எரிபொருள் அளவு குறையும் வரை, விமானம் நீர்கொழும்பு கடற்காயலுக்கு மேலே 7,000 அடி உயரத்தில் மணிக்கு 253 நாட்ஸ் வேகத்தில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் பறக்க வேண்டியிருந்தது.

தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களை வரவழைத்து, அவசரகாலத் தரையிறக்கத்திற்காக விமான நிலையமும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு

கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது.

இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து வட்டமடித்துள்ளது.

மீண்டும் தரையிறக்கம்

அத்துடன் எரிபொருளை குறைத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

246 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி - சற்றுமுன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம் | Bird Attacked On Sri Lankan Flight

7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US