இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு நோயாளர்கள்
இந்தநிலையில், பெரும்பாலான டெங்கு நோயாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |