மன்னார் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினுடைய தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் கழிவகற்றல் செயன்முறை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினாலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையினாலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல பகுதிகளிலிருந்து வந்த நோயாளர்கள்
மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு டிசம்பர் மாதத்தில் மட்டும் 88 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந் நோயாளர்கள் நாட்டின் பல பாகங்களிவிருந்தும் வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த டெங்கு தொற்றாளர்கள் மன்னார் நகரத்தின் சில பகுதிகளிலும் பேசாலை, விடத்தல் தீவு பகுதிகளிலும் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பபட்டுள்ளனர்.
காய்ச்சலிற்கான அறிகுறிகள்
டெங்கு நோயைப் பொறுத்தவரையில் சாதாரண டெங்கு காய்ச்சல் ,குருதி பெருக்குடனான டெங்கு காய்ச்சல் என இருவகையான டெங்கு காய்ச்சல் நிலைமைகள் உருவாகின்றன.
குருதிப் பெருக்குடனான காய்ச்சலினுடைய ஆரம்ப அறிகுறிகளாக நெற்றி பொட்டை அண்டிய தலை வலி, கண்ணின் பின்புறம் நோவு, தொண்டை நோவு, தசை நோவு சிலருக்கு வயிற்றில் நோவு போன்ற குணங்குறிகள் காணப்படும்.
அதிக காய்ச்சலாக மாற்றமடையும் சந்தர்ப்பத்தில் உடல் பகுதி குளிர்ந்தும் வலது பக்க வயிற்றின் மேற்பகுதி நோவுடனும் இருக்கும்.
ஆகவே இந்த டெங்கு குருதி பெருக்குடனான காய்ச்சல் உள்ள நோயாளிகள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சரியான முறையில் சிகிச்சை பெறுவது கட்டாயமாகும் என வைத்தியர் ரி. வினோதன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
