யாழில் தீவிரமடையும் டெங்குத் தொற்று: கொழும்புக் குழுவினர் ஆய்வு
யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு உட்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வந்துள்ள மருத்துவர்களும் நேற்று (13.01.2024) இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்று தீவிரமாகப் பரவி வரும்நிலையில் யாழ். நகரப் பகுதிகளில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற குழுவினர் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுவினருக்கு மேலதிகமாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் டெங்கு தொடர்பான கள ஆய்வுப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.
இலகுவான பராமரிப்பு
இதற்கமைய டெங்குத் தொற்று இலகுவாகப் பரவக்கூடிய ஏதுநிலையில் இருக்கும் பகுதிகள் அவதானிக்கப்பட்டு விரைவில் டெங்கைக் கட்டுப்படுத்தக்கூடிய திட்டங்களாக சில உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.
மேலும், யாழ். நகரப் பகுதிகளில் வெள்ளம் வடிந்தோட முடியாத வகையிலும், பராமரிப்புக்கு கடினமான வகையிலும் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் இலகுவான பராமரிப்பை மேற்கொள்ளும் படியான மறுகட்டுமானம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
