நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் (Video)

Batticaloa Kilinochchi Trincomalee SL Protest
By Kumar Jan 05, 2023 01:05 PM GMT
Report

நாடளாவிய ரீதியில் பல்வேறு காரணங்களை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மட்டக்களப்பில் ஜனாதிபதியுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று (05.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல மக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் (Video) | Demonstrations Been Carried Out Across The Country  

மேலதிக செய்தி: பவன்

திருகோணமலை

திருகோணமலையில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையில் இன்று (05.01.2023) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து ஊடகங்களுக்கு லவகுசராஷா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதன்போது ஊடகங்கள் வாயிலாக தமிழ் அரசியல் வாதிகளுக்கு தெளிவுபடுத்தும் விதத்தில் ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் (Video) | Demonstrations Been Carried Out Across The Country

மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சிறுபான்மை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே நடைபெறவுள்ளதாக அறிகின்றோம். அதனை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்.

எனினும், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளையும், அரசியல் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் இப்பேச்சு வார்த்தைகள் அமைய வேண்டுமாயின் இப்பேச்சு வார்த்தைகள் வெளிப்படை தன்மை உடையதாக நடைபெற வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப் படவில்லை என்பதனை நாம் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

செய்தி: பதுர்தீன் ஷியான்

வட பகுதி

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கில் தமிழரசியல் கட்சிகளை ஒருமித்து தமிழர்களுக்கான தீர்வுக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று (05-01-2023) கவனிப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று (05.01.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் (Video) | Demonstrations Been Carried Out Across The Country

இந்த போராட்டம் யாழ். நாவற்குழி, பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நாவற்குழியில் மாபெரும் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

அவர்களால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் (05.01.2023) வடக்கு கிழக்கு ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க.

தமிழ் அரசியல் கட்சிகளின் வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சிறுபான்மை பிரதிநிதிகளுக்கும் இலங்கை சனாதிபதிக்கும் இடையே நடைபெறவுள்ளதாக அறிகின்றோம். அதனை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்.

எனினும், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும், அரசியல் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் இப்பேச்சு வார்த்தைகள் அமைய வேண்டுமாயின் இப்பேச்சு வார்த்தைகள் வெளிப்படை தன்மை உடையதாக நடைபெற வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப் படவில்லை என்பதனை நாம் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

மேலும்,நடைபெறவுள்ள அரசியல் தீர்வு தொடர்பான இப் பேச்சு வார்த்தைகளில் தனியொரு கட்சியைச் சார்ந்த ஒரு சில பிரதிநிதிகள் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக வாடகங்கள் ஊடான தகவல்கள் வெளிவருகின்றமையை நாம் பார்க்கின்றோம்.

காணப்படாததை நாங்கள் இங்கு மேலும் , அக்குறிப்பிட்ட அரசியில் கட்சியின் தலைமைத்துவங்களிடேயும் பரஸ்பரம் வெளிப்படைத்தன்மையுடைய கலந்துரையாடல்களோ, ஒருமித்த முன்னெடுப்புக்களோ கட்டிக் காட்டுகின்றோம்.

இது இத்தரப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்த மக்கள் மத்தியில் காணப்படும் விமர்சனமாக உள்ளது.

பங்கம் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நிலையான அரசியல் தீர்விற்கு விளைவிக்கும் ஜனநாயகமற்ற போக்காக காணப்படுவதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.

இதுவே தமிழ் மக்கள் தமது ஜனநாயக வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கடமையாகும்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் (Video) | Demonstrations Been Carried Out Across The Country  

அந்த வகையில் கீழ் குறிப்பிடப்படும் முக்கிய விடயங்களிலும் , ஏனைய யங்களிலும் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்.

1.வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.

02. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசினால் மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.

03. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும் . இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.

04. வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

05. தற்போது வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983 களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

06. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத , கலாச்சார இடங்கள் தொல்பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.

07.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு. இலங்கை. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

செய்தி: யது, தீபன், கஜித்தன்

முல்லைத்தீவு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகையின் கீழிருந்த தண்ணீரூற்று பொதுசந்தையில் நேற்றும் (04.01.2023) நேற்றுமுன்தினமும் (03.01.2023) வியாபாரிகள் வீதியில் நின்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சந்தையினை புதிதாக இந்த வருடத்துக்கு குத்தகைக்கு எடுத்தவர்கள் 07 % என்ற அடிப்படையில் அதிகளவான வரியினை விதிப்பதால் தாம் வியாபாரம் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்து முரண்பட்டு வந்துள்ளனர்.

இதேவேளை புதிதாக இவ்வாண்டு சந்தையை குத்தகைக்கு எடுத்தவர்கள் சந்தையின் வாசலில் சோதனை சாவடி போல் வாகனங்களை மறிப்பதற்கு தடை ஒன்றினை புதிதாக வைத்துள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் (Video) | Demonstrations Been Carried Out Across The Country

இந்நிலையில் நேற்று முன்தினம் (03)செவ்வாய்க்கிழமை இறைச்சி இறக்குவதற்காக வாகனம் ஒன்று சந்தைக்குள் சென்ற நிலையில் வாகனம் குறித்த பாதை தட்டு பட்டு விபத்துக்குள்ளானதில் துலா உடைந்துள்ளது.

சந்தை குத்தகை தாரர்கள் சரியாக பிரச்சினையினை தீர்க்காது கோழிக்கடை உரிமையாளரை பெலிசாரை கொண்டு அடைத்து வைத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் (Video) | Demonstrations Been Carried Out Across The Country

குறித்த சந்தையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சந்தை வியாபாரிகள் பொலிஸ் நிலையம் சென்றபோது சந்தை குத்தகைதாரர்கள் வியாபரிகளின் வியாபார நிலையத்தினையும் சந்தைவளாகத்தினையும் தன்னிச்சியாக பூட்டி வைத்துள்ளனர்.   

செய்தி: வருணன், கீதன்

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US