யாழ். வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை சமூகத்தால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
சட்ட விரோதமாக பாடசாலையால் நிதி சேகரிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதற்காகவும், பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முன்னாள் பழைய மாணவர் சங்க நிர்வாகிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அதே பாடசாலையின் பணியாற்றும் அவரது மனைவியான ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் இன்று (10) இடம்பெற்ற போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நடவடிக்கைகள்
பாடசாலை வாயிலில் இருந்து ஆரம்பமான கவன ஈர்ப்பு போராட்டம் வடமராட்சி வலய கல்வி அலுவலகம் வரை சென்று வலய கல்வி பணிப்பாளரிடம் மனு கையளிக்கப்பட்டு தான் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்திருந்த நிலையில் அங்கு விரைந்த வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் மாணவர்கள், ஆசிரியர்களுடன் பேசி உரிய நடவடிக்கைகளை ஏடுப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் சில மணி நேரங்களின் பின் கல்வி நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |