கந்தளாயில்வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்
கந்தளாயில் வீதியை புனரமைத்து தருமாறு கறுப்பு பட்டி கட்டி மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேராறு இரண்டாம் கொலனி பகுதிகளில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக எந்த ஒரு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து இன்று (07) குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்பில் பொது மக்கள் சார்பில் கருத்துரைத்த ஒருவர் “பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் நோயாளர்கள் வரை அனைவரும் குறித்த பாதையின் ஊடாக பயணிக்கின்ற நிலையில் எங்களுடைய வீதியானது ஏன் இன்னும் புனரமைக்கப்படாமல் உள்ளது. நாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றோமா.
நாம் இந்த விடயத்தில் எந்தவொரு அரசியல்வாதியையும் குற்றஞ்சாட்டவில்லை. எங்களுடைய தேவை மூவின மக்களும் சேர்ந்து வாழுகின்ற குறித்த பகுதியில் பாதையை சீர்செய்து தருவதே எமது கோரிக்கையாகும்.
எனவே, எங்களுடைய வீதி வருங்காலத்திலே புனரமைப்பு செய்து தரப்பட வேண்டும்.புனரமைப்பு மறுக்கப்படுமிடத்து ஆளுநரிடத்தில் இந்த விடயம் தொடர்பில் பாரப்படுத்தவுள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |