இயற்கை வளங்களை பாதுகாப்போம்!வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் (PHOTOS)
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இயற்கை வளங்களை காப்போம்! மண் கொள்ளைக்கு எதிரான பேரணி எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
வெருகல் இளைஞர் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று (22) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இயற்கை வளங்களை காப்போம்!அரச அதிகாரிகள் மணல் அகழ்வை தடுப்பார்களா ஜனாதிபதி அவர்களே கூடிய கவனம் செலுத்துங்கள் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வெருகல் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்மகஜரில் வெருகல் பிரதேசம் ஒரு பாரம்பரியமாக விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டது.மகாவலி ஆற்றின் ஒரு பகுதியின் கொடையால்ஏழை மக்கள் பசி ஆறுகின்றனர். ஆற்றில் ஒதுங்கும் மணல் எமது தேவைக்கு மட்டும் அளவுடன் பயன்படுத்துகின்றோம். அது இயற்கைக்கோ எமக்கோ எந்த பாதிப்பையும் தந்ததில்லை அரசும் இதனை அனுமதிக்கின்றது.
ஆனால் கடந்த நான்கு மாதங்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் வெருகல் பிரதேச செயலகத்தால் 41 பேருக்கு மண் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டு இரவுபகலாக கனரக வாகனங்கள் மூலம் வழங்கப்பட்ட அளவுக்கு மேல் சட்டவிரோதமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மண் காலப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவது மிக வேதனை தருகின்றது.
இந்த செயற்பாட்டுக்கு தங்களுடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினரே துணை நிற்பது வேதனையின் உச்சம் இது தங்கள் பெயருக்கும், கட்சிக்கும் தங்கள் இயற்கை வளம் காக்கும் கொள்கைக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது.
பிரதேச மக்களுக்கு இந்த மண் அகழ்வினால் எந்த பயனும் இல்லை. ஆனால் வெள்ளப்பெருக்கு மண்ணரிப்பு, ஆற்றுப் பெருக்கு, வரட்சி நிலத்தடி நீர்மட்டம் குறைதல் என கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய இயற்கை அனர்த்தத்தை நிச்சயம் இந்த மண்ணை ஏற்படுத்தும் யாரோ கோடீஸ்வரர்கள் வயிறு வளர்க்க ஏழைகள் எமது வயிற்றில் அடிப்பதை நாம் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம் எனவும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே தமது பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு ஈடுபடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இதன் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 16 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
