இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான நேற்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அரச படைகளாலும், அரச படைகளுடன் இணைந்து செயற்பட்ட குழுக்களாலும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த்தேசிய உறவுகளுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் லண்டன் திராஃபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டமும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மனு அளிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய தொகுதி
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய தொகுதி எம்.பிக்களின் அழைப்பில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் லண்டன் வாழ் தமிழ் இளைஞர்கள் மற்றும் குறிப்பாக தமிழ் யுவதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவினை வழங்கியுள்ளனர்.
இவ்வேளையில் இதே நாளில் தாயகத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆர்ப்பாட்டங்களில் அரச பொலிஸ், அதிரடிப்படை, இராணுவத்தினர் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்து கோஷங்கள் எழுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |