சம்பள பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்: வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்பாட்டம்
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(18.01.2024) குறித்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நிரந்தர தீர்வு
இந்நிலையில், ஏனைய அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுகளில் அரசனது கவனம் செலுத்துவதாகவும், சுகாதார உதவியாளர்கள் தொடர்பில் இதுவரை எந்த அறிவிப்புக்களும் வெளிவரவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் தமது கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை அரசாங்கம் உடனடியாக பெற்றுத்தரவேண்டும் எனவும் சுகாதார உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனை தொழிற்ச் சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் புறக்கணிப்பும் கவயீர்ப்பு போராட்டம், யாழ். கொடிகாமம் - வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்களும் மேற்கொண்டிருந்தனர்.
கொடிகாமம் - வரணி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(18.01.2024) குறித்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முப்பத்தையாயிரம் ரூபா சம்பள உயர்வு, சீருடைக்காண பணம் அதிகரித்தல், மேலதிக நேர கடமைகளுக்கான கொடுப்பனவு, சிற்றூழியர்களை அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கையினை முன்வைத்து வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் நண்பகல்12 மணி தொடக்கம் 1 மணி வரை பணிகளைப் புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி - எரிமலை

‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: ஆசியா நோக்கி நகர்கின்றதா முழு அளவிலான யுத்தம்..!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













