சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு இரு சந்தித்துக் கொண்ட சகோதரர்கள்
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுக்கப்பட்டு பிரிந்த இரு சகோதரர்கள், 10,000 மைல் தூரத்தைக் கடந்து அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக நேரில் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானியா - வேல்ஸைச் சேர்ந்த 64 வயதான ரசல் கோவர், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் தனது 69 வயது அண்ணன் பீட்டரைச் சந்திப்பதற்காக 23 மணிநேர வான்வழிப் பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்றடைந்தார்.
1950-களில் லண்டனில் பிறந்த பீட்டர், சமூகச் சூழல் காரணமாகக் குழந்தையாக இருந்தபோதே தத்து கொடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தத்தெடுக்கப்பட்ட..
சமீபத்தில் தனது வளர்ப்புச் சகோதரி மூலம் உண்மையை அறிந்த பீட்டர், மரபணு (DNA) சோதனைகளின் உதவியுடன் தனது தம்பி ரசலை அடையாளம் கண்டுள்ளார்.

இந்த நீண்ட காலப் பிரிவுக்குப் பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருந்ததாக ரசல் தெரிவித்தார். பிரிஸ்பேனில் உள்ள பீட்டரின் இல்லத்தில் இருவரும் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக் கொண்ட தருணம் அங்கிருந்த உறவினர்களால் படம்பிடிக்கப்பட்டது.
குறிப்பாக, தங்களின் மறைந்த தாயாரின் 85-வது பிறந்தநாள் அன்றே இருவரும் சந்தித்துக் கொண்டது தற்செயலான ஒன்று என்றாலும், அது விதியால் தீர்மானிக்கப்பட்ட ஒரு தருணம் என ரசல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்தப் பிரிவின் ரகசியத்தைத் தனது தாய் இறப்பதற்கு முன்னரே சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமல் போனதை ரசல் நினைவு கூர்ந்தார்.
இந்த வருடக் கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தனது அண்ணன் மற்றும் அவரது 17 பேர் கொண்ட பெரிய குடும்பத்துடன் இணைந்து அவுஸ்திரேலியாவில் உற்சாகமாகக் கொண்டாட ரசல் திட்டமிட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam
இங்கிலாந்து அணியின் மது அருந்தும் கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டு: பென் ஸ்டோக்ஸ் பதிலடி News Lankasri