அரசாங்கத்திற்கு எதிராக கல்முனை வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் (Photos)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினால் வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் தங்குதடையின்றி இடம்பெற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இப்போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பினை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
மேலும் பல கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம் விநியோகித்து போராட்டக்காரர்கள் தமது போராடத்தினை முன்னெடுத்தனர்.
அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசுக்கு எதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பொறுப்பு தோல்வியடைந்த அரசாங்கத்தையும் சீரழிந்த அரசியல் அமைப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்து நல்ல அரசியல் கலாச்சாரத்தையும் ஜனநாயகத்தையும் பேணிக்காக்க உண்மையான தேசப்பற்று வேலைத்திட்டத்தை உருவாக்குவதே மக்கள் போராட்டத்தின் நோக்கமாகும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் சட்டரீதியான தீர்வுகள் காணப்பட வேண்டும் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.






