திருகோணமலையில் மணல் அகழ்வதை தடுக்குமாறு கோரி மூன்றாவது தடவையாகவும் ஆர்ப்பாட்டம் (Video)
திருகோணமலை வெருகல் - நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்றாவது தடவையாகவும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (31.08.2023) வெருகல் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெருகல் - நாதனோடை பகுதியில் 1000 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
இந்நிலையில் அவ்விடத்தில் மணல் அகழப்பட்டால் அது வெருகல் ஆற்றின் அணைக்கட்டை உடைக்கும் அபாயம் இருப்பதாகவும் இதனால் மக்களுடைய உடமைகள், வாழ்வாதாரம் என்பன பாதிக்கும் என்பதனால் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 27ம் திகதி மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அன்றைய தினம் மண் அகழ்வு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
மேலும், அன்றையதினம் (28.08.2023) இரவு மக்களை அச்சுறுத்தும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மற்றும் வட்டவான் மரணசங்கத் தலைவர் ஆகியோர் ஈச்சிலம்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மறுநாள் (29.08.2023) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri
